Skip to main content

Posts

Showing posts from March, 2022

அப்துல்ரஜாக் குர்னாவின் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் துயரத்தைச் சொல்லிடும் நாவல் - ’தி லாஸ்ட் கிஃப்ட்’ (The Last Gift)

டான்சானியா நாட்டின் ஜான்ஜிபர் தீவில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் அப்துல்ரஜாக் குர்னா 2021 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்றுள்ளார் . காலனிய ஆட்சியின் கொடூரங்களையும் , அகதிகளின் வாழ்வியல் சோகங்களையும் தன்னுடைய புனைவிலக்கியங்களில் சித்தரித்துள்ளார் . ’ பாரடைஸ் ’, ’ ஆஃப்டர் லைவ்ஸ் ’ ‘ தி லாஸ்ட் கிஃப்ட் ’ போன்ற பத்து நாவல்களையும் , ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள குர்னா மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார் . சல்மான் ருஷ்டி , குகி வா தியாங்கோ , வி . எஸ் . நைபால் ஆகியோரின் படைப்புகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் . 1968 இல் தன்னுடைய பதினெட்டு வயதில் ஜான்ஜிபர் தீவில் ஏற்பட்ட இனக் கலவரத்திலிருந்து தப்பிக்கவும் , தன்னுடைய மேற்படிப்புக்காகவும் இங்கிலாந்து வந்த குர்னா அங்கே யே நிரந்தரமாகக் குடியேறியுள்ளார் . கெண்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பின்காலனிய இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் . தன் படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் எழுதினாலும் வாய்ப்புகள் ...