நூல் அறிமுகம்: ’ராமாநுஜர்’, இந்திரா பார்த்தசாரதியின் நாடகம். சாதியற்ற சமுதாயத்தை; அனைவருக்குமான வைணவத்தை நிறுவ விரும்பிய ஓர் ஆச்சாரியாரின் வரலாறு. -பெ.விஜயகுமார். 1930இல் சென்னையில் பிறந்து. கும்பகோனத்தில் வாழ்ந்த பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு இந்திரா பாத்தசாரதி என்ற புனைபெயரில் எழுதுகிறார். குடந்தை அரசு கல்லூரியில் பட்டப் படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு, மூன்றாண்டுகள் திருச்சி தேசியக் கல்லூரியிலும், நாற்பதாண்டுகள் டில்லி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். ஐந்தாண்டுகள் போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாரகவும் இருந்துள்ளார். நிறைய சிறுகதைகள், 19 நாவல்கள், 15நாடகங்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது, சங்கீத் நாடக அகாதமி விருது, பாரதிய பாஷா பரிஷத், பத்மஸ்ரீ விருது, தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது, போன்ற விருதுகள் பெற்றுள்ளார். சாகித்ய அகாதமி ஃபெல்லோஷிப் என்ற கௌரவமும் கிடைத்துள்ளது. சரஸ்வதி சம்மான் விருது பெற்ற ராமாநு...