Skip to main content

Posts

Showing posts from November, 2025

நூல் அறிமுகம் - டாம் மாமாவின் குடிசை - Harriet Beecher Stowe.

    நூல் அறிமுகம் ’அங்கிள் டாமின் குடிசை ’ (Uncle Tom’s Cabin) 1850 களில் அமெரிக்க நாட்டை உலுக்கிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் நாவல் . அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும் காரணமல்ல. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றழைக்கப்படும் கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பும் காரணமாகும். 1514 இல் ஒரு போர்ச்சுக்கீஸ் கப்பல் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்கும் வணிகத்தைத் துவக்கியது . 1500-1865 இவற்றிற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 12.5 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அப்பாவி மக்களைப் பிடித்துச் சென்று அமெரிக்காவின் சந்தைகளில் விற்கப்படும் கொடூரத்தை அலெக்ஸ் ஹேலி ’தி ரூட்ஸ்’ என்ற நாவலில் உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரித்துள்ளார். கறுப்பின மக்கள் இன்றும் அமெரிக்காவின் நிறவெறிக்குப் பலியாவதை அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம். மிகச் சமீபத்தில் ஃப்லைடு லாய்டு என்ற கறுப்பின இளைஞரை அமெரிக்காவின் காவல்துறை அதிகாரி காலில் மிதித்துக் கொன்ற காட்சி உலகை...

நூல் அறிமுகம் - இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று நாவல்

      ’வேர்ப்பற்று’ இந்திரா பார்த்தசாரதியின் ஓர் அரசியல் நாவல். தமிழ் இலக்கிய உலகுக்கு இந்திரா பார்த்தசாரதி அளித்துள்ள கொடை அளப்பரியது. கும்பகோணத்தில் தன்னுடைய இளமைக் காலங்களைக் கழித்த இவர் நிறைய நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். திருச்சி தேசியக் கல்லூரியில் மூன்றாண்டுகளும், தில்லி பல்கலைக்கழகத்தில் முப்பதாண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியத் தத்துவம் மற்றும் பண்பாட்டுப் பிரிவின் வருகைதரு பேராசிரியராக ஐந்தாண்டுகள் இருந்துள்ளார். புதுவை பல்கலைக்கழகத்தில் ‘சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளி’யை நிறுவி தமிழ் நாடகக் கலையை வளர்த்தெடுத்தார். இவரின் ’நந்தன் கதை’ நாடகமும் ’ராமானுஜர்’ நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற இவரின் ‘குருதிப் புனல்’ நாவல் மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானது. 1968இல் அன்றைய தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகள் 44 பே...