நூல் அறிமுகம்: சைலஸ் மார்னர் - ஜார்ஜ் எலியட் எழுதிய மானுடத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நாவல். ஆங்கில இலக்கிய வரலாற்றில் ’ராணி விக்டோரியாவின் காலம்’ என்றழைக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் எலியட் (1819-1890). இவரின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். தான் வாழ்ந்த காலத்திய இங்கிலாந்தின் கிராமப்புர வாழ்வியலை எழுத்தோவியம் ஆக்கினார். மிகை உணர்ச்சிகளற்ற யதார்த்தவாத இலக்கியத்தைப் படைத்தார். ’தி மில் ஆன் தி ஃப்லாஸ்’, ’ஆடம் பீடு’, ’சைலஸ் மார்னர்’, ரொமொலா’, ’டேனியல் டிரொன்டா’, ’மிடில்மார்ச்’ ’ஃபெலிக்ஸ் ஹோல்ட்’ ஆகிய ஏழு நாவல்களைப் படைத்து புனைவிலக்கிய உலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார். இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஜார்ஜ் எலியட் தந்தை கொடுத்த ஆதரவில் நன்கு படித்ததுடன் சிறந்த அறிஞர்களின் நட்பையும் பெற்றிருந்தார். ஹெர்பர்ட் ஸ்பென்சர், ராபர்ட் ஓவன், ரால்ஃப் வால்டோ எமர்சன், ஹாரியட் மார்ட்டினோ போன்ற அறிஞர்கள் குழாமில் வலம் வந்தார். அறிவியல் சிந்தனைகள் வளர்ச்சி பெற்றதால் பத்தொன்பதாம் நூற்றாண்டு பைபிள் கோட்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. டேவிட் ஸ்டராஸ்,...