Skip to main content

Posts

Showing posts from February, 2026

அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - நூல் அறிமுகம் - ஆசிரியர் - தில்லைநாயகம்

  நூல் அறிமுகம்: ‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’; ச.தில்லைநாயகத்தின் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. --பெ.விஜயகுமார்.                                          அ.முத்துலிங்கம் தமிழ் இலக்கியத்துக்கு அளித்துவரும் கொடை அளப்பரியது. இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து கனடாவில் வாழ்பவர். உலக வங்கியிலும், ஐ.நா. சபையிலும் பணியாற்றி உலகளாவிய அனுபவங்கள் பெற்றவர். கடந்த அறுபதாண்டுகளாக நிறையக் கதைகளும், கட்டுரைகளும் எழுதிக் குவித்துள்ளார். இவரின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ ஒரு தனித்துவமான நாவல். வாழ்வின் அனுபவங்களை கற்பனை கலந்து எழுதி உண்மை எது, கற்பனை எது என்றறியாது வாசகர்களைத் திணற்செய்வது இந்நாவலின் தனிச் சிறப்பு. இவரின் அனைத்துப் படைப்புகளையும் amuttu.net என்ற வலைத்தளத்தில் படித்து மகிழலாம். வாசிப்பு அனுபவத்தை அவருட...