Skip to main content

Posts

Showing posts from January, 2026

நூல் அறிமுகம் - அழகிய பெரியவன் - நாவல் - வல்லிசை

  அழகிய பெரியவனின் ’வல்லிசை’ நாவல் - இழவு வீட்டில் பறை அடிப்பதை இழிவின் அடையாளம் எனக் கருதி தன் சமூக மக்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடும் ஒரு போராளியின் கதை. -பெ.விஜயகுமார்.        அழகிய பெரியவன் வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நான்கு நாவல்களும், நிறையச் சிறுகதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. பெரியார் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழக அரசின் நாவல். கவிதைகளுக்கான விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது எனப் பல விருதுகளும் பெற்றுள்ளார். ’கண்காணிக்கும் மரணம்’, ’குறடு’ இவ்விரண்டு சிறுகதைகளும் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னதான காலத்தையும், காட்சிகளையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் நாவலாசிரியர். அவரும் அறிந்திராத 1940களின் தமிழகத்தைத் தத்ரூபமாகச் சித்தரிப்பது நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. காலத்தைப் பின்னோக்கி...

சதத் ஹாசன் மண்ட்டோவின் சிறுகதைகள் - டோபா டேக் சிங் மற்றும் ‘திற’.

  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தில் நடந்த துயர்மிகு நிகழ்வுகளைச் சித்தரிக்கும் சிறுகதைகள் ’டோபா டேக் சிங், மற்றும் ‘திற’. சதத் ஹாசன் மண்டோ இந்தியாவில் பிறந்து பிரிவைக்குப்பின் பாகிஸ்தானில் வாழ்ந்து மறைந்த உருது எழுத்தாளர். இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உருது புனைவிலக்கிய எழுத்தாளராகக் கொண்டாடப்படும். மண்ட்டோ நிறையச் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதினார். பிரிவினைக்காலத்தில் நிகழ்ந்த கொடுமைகள், அவலங்கள், துரோகங்கள், மனித மாண்புகள் அழிந்த சோகங்கள் அனைத்தையும் தன்னுடைய படைப்புகளில் சொற்சித்திரமாகத் தீட்டினார். தேசப் பிரிவினையின் வரலாறு உண்மையில் இந்திய-பாகிஸ்தானியப் பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட வரலாறு என்றார் மண்ட்டோ. இந்த வரலாறை இரத்தம் கசியும் மொழியில் எழுதியவர் மண்ட்டோ. மனசாட்சியோடு இயங்குபவர்களின் மற்றொரு பெயர்தான் படைப்பாளிகள். பேனாவில் மை இடுவதற்குப் பதிலாக மனசாட்சி இட்டு எழுதியவர் மண்ட்டோ. ’டோபா டேக் சிங்’ மண்ட்டோவின் காத்திரமான கதைகளில் ஒன்று. ககைத்த நகைச்சுவையுடன் (black humour) சொல்லிச் செல்லப்படும் இக்கதையின...

நூல் அறிமுகம் - ஔரங்கசீப் - நாடகம் - இந்திரா பார்த்தசாரதி

  நூல் அறிமுகம்: ’ஔரங்கசீப்’, மொகலாயப் பேரரசின் ஒரு நெருக்கடிக் காலத்தைக் காட்சிப்படுத்தும் இந்திரா பார்த்தசாரதியின் வரலாற்று நாடகம்.   தமிழ் நாடக இலக்கியத்துக்கு இந்திரா பார்த்தசாரதியின் கொடை அளப்பரியது. சமூகம், வரலாறு, தொன்மம் என்று அனைத்து நாடக வகைமைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரின் ’ஔரங்கசீப்’, ‘ராமாநுஜர்’ இரண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ள வரலாற்று நாடகங்கள். ஒன்று மதத்தில் புரட்சி செய்த மகான் ராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. மற்றொன்று மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப்பின் எழுச்சியையும், வீழ்ச்சியையும்    சித்தரிக்கிறது. திரைப்படக் கலையின் வருகையினால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நாடகக் கலையாகும். தமிழ் நாடகக் கலையை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு சில நாடகாசிரியர்களுள் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. தன்னுடைய நாடகங்கள் போதியளவு தமிழ்நாட்டில் அரங்கேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உண்டு.   ஔரங்கசீப் நாடகம் தமிழில் அரங்கேறுவதற்கு முன்னரே இந்தியில் அரங்கேறியது மிகப் பெரிய நகைமுரணாகும். தமிழர்கள் மனதில் திரைப்படங்கள் மீதான ஈர்ப்...