நூல் அறிமுகம் தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நே ட்டிவ் ’ - நிறைவேறாக் காதலின் வலியைச் சொல்லிடும் நாவல் பெ.விஜயகுமார் ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் கவிஞர் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் என்று சற்று வினோதமாக தாமஸ் ஹார்டி (1840-1925) கொண்டாடப்படுகிறார் . ஏராளமான கவிதைகளும், ’ஜுட் தி அப்ஸ்கியூர்’, ’தி மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ்,’, ’டெஸ்’ ’உட்லாண்டர்ஸ்’, தி டரம்பட் மேஜர்’, ’ஃபார் ஃப்ரம் தி மேடிங்க் கிரவுடு’ போன்ற நாவல்களும் தாமஸ் ஹார்டி எழுதியுள்ளார். விக்டோரியா ராணி காலத்தில் அவர் பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் வெசக்ஸ் (Wessex) பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்தரிப்பதால் ’வெசக்ஸ் நாவல்கள்’ என்று ஹார்டியின் நாவல்கள...