மேலாண்மை பொன்னுச்சாமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கலை இலக்கியம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி வருகிறது. இந்த சங்கத்தைச் சார்ந்த அருணன், தமிழ்ச்செல்வன், கந்தர்வன், ஆதவன் தீட்சன்யா, வேல ராமமூர்த்தி, லெட்சுமணப் பெருமாள் போன்றவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். இவர்களில் ஒருவரான மேலாண்மைப் பொன்னுச்சாமி புனைகதை இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் இருக்கும் மேலாண்மறை நாடு எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்னுச்சாமி நிறைய சிறுகதைகளையும், முற்றுகை, இனி, ஆகாயச் சிறகுகள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் ’முற்றுகை’ நாவல் கல்கி இதழின் சிறந்த நாவலுக்கான பரிசை வென்றது. சாகித்ய அகாதமி விருது மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாட்சிமை விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். த.மு.எ.க.சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து அதை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு. ’செம்மலர்’ இலக்கிய இதழின்...