Skip to main content

Posts

நூல் அறிமுகம் - ஜார்ஜ் எலியட் நாவல் - சைலஸ் மார்னர்

  நூல் அறிமுகம்: சைலஸ் மார்னர் - ஜார்ஜ் எலியட் எழுதிய மானுடத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நாவல். ஆங்கில இலக்கிய வரலாற்றில் ’ராணி விக்டோரியாவின் காலம்’ என்றழைக்கப்பட்ட காலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் எலியட் (1819-1890). இவரின் இயற்பெயர் மேரி ஆன் இவான்ஸ். தான் வாழ்ந்த காலத்திய இங்கிலாந்தின் கிராமப்புர வாழ்வியலை எழுத்தோவியம் ஆக்கினார். மிகை உணர்ச்சிகளற்ற யதார்த்தவாத இலக்கியத்தைப் படைத்தார். ’தி மில் ஆன் தி ஃப்லாஸ்’, ’ஆடம் பீடு’, ’சைலஸ் மார்னர்’, ரொமொலா’, ’டேனியல் டிரொன்டா’, ’மிடில்மார்ச்’ ’ஃபெலிக்ஸ் ஹோல்ட்’ ஆகிய ஏழு   நாவல்களைப் படைத்து புனைவிலக்கிய உலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குகிறார். இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஜார்ஜ் எலியட் தந்தை கொடுத்த ஆதரவில் நன்கு படித்ததுடன் சிறந்த அறிஞர்களின் நட்பையும் பெற்றிருந்தார். ஹெர்பர்ட் ஸ்பென்சர், ராபர்ட் ஓவன், ரால்ஃப் வால்டோ எமர்சன், ஹாரியட் மார்ட்டினோ போன்ற அறிஞர்கள் குழாமில் வலம் வந்தார். அறிவியல் சிந்தனைகள் வளர்ச்சி பெற்றதால் பத்தொன்பதாம் நூற்றாண்டு பைபிள் கோட்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியது. டேவிட் ஸ்டராஸ்,...
Recent posts

நூல் அறிமுகம் - தாமஸ் ஹார்டியின் நாவல் - டெஸ் ஆஃப் தி டர்பர்வில்ஸ்

  இங்கிலாந்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தாமஸ் ஹார்டியின் டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (Tess of the D’Urbervilles) எனும் துயர்மிகு நாவல்!                            தாமஸ் ஹார்டி (1840-1928) ஆங்கில இலக்கியத்தின் பெருமைமிகு   நாவலாசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். தன்னுடைய எழுத்துப் பணியின் முதல் பாதியில் நாவல் எழுதியும், இரண்டாம் பாதியில் கவிதைகள் எழுதியும் வெற்றி பெற்றார். தான் பிறந்து வளர்ந்த வெசக்ஸ் எனப்படும் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலையே தன் கதைப் பொருளாக்கினார். ’வெசக்ஸ் நாவல்கள்’ என்றழைக்கப்பட்ட ஹார்டியின் தி ரிடர்ன் ஆஃப் தி நேட்டிவ், மேயர் ஆஃப் கேஸ்டர் பிரிட்ஜ், ஃபார் ஃப்ரம் தி மேடிங் கிரவ்டு, தி வுட்லாண்டர்ஸ், டெஸ் ஆஃப் தி டர்பர்வில், ஜூடு தி அப்ஸ்கியூர் போன்ற நாவல்கள் என்றென்றும் அழியாப் புகழ் பெற்றவை. ஹார்டியின் கடைசி இரு நாவல்களான டெஸ் ஆஃப் தி டர்பர்வில் (1891) மற்றும் ஜூடு தி அப்ஸ்கியூ...