மா . அரங்கநாதன் நாஞ்சில் நாட்டில் திருவெண்பரிசாரம் எனும் ஊரில் பிறந்தவர் . நூற்றுக்கணக்கில் கதைகளும் , கட்டுரைகளும் , இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார் . இவரின் ‘ பொருளின் பொருள் கவிதை ’ கட்டுரையும் , ’ பறளியாற்று மாந்தர் ’ என்ற நாவலும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்படுபவை . ‘ முன்றில் ’ இலக்கிய இதழ் ஆசிரியராக இருந்து சிறப்புடன் நடத்தியவர் . தமிழக அரசு விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , லில்லி தேவசிகாமணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார் . தமிழில் ஆழ்ந்த புலமையும் , புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார் . அரங்கநாதனின் படைப்புகள் தமிழ் வாழ்வின் நுட்பங்களை அழகுடன் பதிவுசெய்கின்றன . அரங்கநாதனின் படைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு தமிழகத்தில் எந்தவொரு சமூக அரசியல் இயக்கமும் செயல்பட முடியாது . மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற ஆர்வத்தை அவர் கதைகளில் காண்கிறோம் . “ சிறுகதையில் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானதாகிறது . கதை முழுவதையும் ஒரு வலுவான சொல் கொடிபிடித்துக் கொண்டு நிற்கும் . அதற்கு மாறாக வேறொரு ...