Skip to main content

Posts

Showing posts from May, 2023

முன்ஷி பிரேம்சந்த்

  இந்தி புனைவிலக்கிய முன்னோடி – முன்ஷி பிரேம்சந்த் . முன்ஷி பிரேம்சந்த் இந்தி புனைவிலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தார் . தன்பத் ராய் என்ற இயற்பெயர் கொண்ட பிரேம்சந்த் இந்தி , உருது இரு மொழிகளிலும் எழுதி இந்தியா முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளராக வலம் வந்தார் . காந்தியத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்த பிரேம்சந்த் , காந்தியின் வேண்டுகோளை ஏற்றுத் தன்னுடைய அரசுப் பணியைத் துறந்தார் . விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தார் . காலனிய ஆட்சியும் , நிலப்பிரபுத்துவமும் ஏழை எளிய மக்களைச் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதை தன் சிறுகதைகளில் சித்தரித்தார் . ஒரு விதவையைத் திருமணம் செய்து தன்னுடைய கதைகளில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் சமூகச் சீர்திருத்தத்தை உயர்த்திப்பிடித்தார் . ‘ சேவா சதன் ’, ’ நிர்மலா ’, ‘ கர்மபூமி ’, ’ ரங்கபூமி ’, ‘ கோதான் ’, போன்ற பன்னிரண்டு சிறந்த நாவல்களை எழுதியதனால் ’ உபன்யாஸ் சாம்ராட் ’ ( நாவல்களின் மாமன்னர் ) என்றழைக்கப்பட்டார் . ’ சேவா சதன் ’ நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டுப் பிரபல்யமடைந்தது . எம் . எஸ் . சுப்புலட்சு...

முல்க்ராஜ் ஆனந்த்

  இந்திய முற்போக்கு இலக்கியத்தின் முன்னத்தி ஏர் – முல்க்ராஜ் ஆனந்த் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி (1920-1950) அண்ணல் காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போரும் , பொதுவுடைமை இயக்கத்தின் வீச்சும் வீரியம் பெற்றிருந்த காலம் . தத்துவார்த்த விவாதங்களும் , அரசியல் இயக்கங்களும் நிறைந்திருந்து மக்களை உணர்ச்சியின் விளிம்புகளில் வைத்திருந்த காலம் . ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப் போர்களின் அழிவுகளையும் , பாசிசத்தின் இன வெறி கொடூரங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலம் . சூரியன் அஸ்தமிக்காத பேரரசு என்று கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தன் வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம் . இரண்டு உலகப் போர்களையும் கடந்து சோவியத் யூனியன் லெனின் , ஸ்டாலின் தலைமையில் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்ட காலம் இக்காலத்தின் சாட்சியாகவும் , இக்காலத்தின் நிகழ்வுகளை தன் எழுத்துக்கள் மூலம் ஆவணப்படுத்தியவராகவும் திகழ்ந்தவர் முல்க்ராஜ் ஆனந்த் . முல்க்ராஜ் ஆனந்த் 1905 இல் இன்று பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர...