Skip to main content

அம்பை, பெண்ணிய நோக்கின் முன்னோடி

 

 

 

அம்பை, பெண்ணிய நோக்கின் முன்னோடி!

அம்பை எனும் புனைப்பெயரில் எழுதிவரும் சி.எஸ்.லட்சுமி தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கின் முன்னோடி. புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றாசிரியர். மும்பையில் வசிக்கும் அம்பை, பெண்கள் பற்றிய ஆய்வுக்கான ஆவண மையத்தை (Sound and Picture Archive for Research on Women- SPARROW) நடத்தி வருகிறார். பெண்கள் வரலாறு மற்றும் வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பரிமாணங்களைப் பெற்று வருகிறது. அம்பையின் சிறுகதைகள் பெண்ணிய நோக்கில் அதே சமயம் பிரச்சார வாடையின்றி, அழகியலோடு எழுதப்பட்டவைகளாகும். எழுச்சி பெற்றுவரும் பெண்ணினத்தின் முக்கியக் குரலாக அறியப்படும் அம்பை சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

அம்பையின்வீட்டின் மூலையில் ஒரு சமையலறைஓர் அரிய படைப்பாகும். பெண்களின் உலகு ஆண்களின் உலகிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கிறது. நாள்தோறும், நாள் முழுவதும். சமையல் அறையில் அடைபட்டுக் கிடப்பதே பெண்களுக்கு வாழ்க்கை என்றானதாகும். அவர்களின் ஓய்வில்லாத வேலைக்குக் கூலியும் இல்லை. மதிப்பும் இல்லை. “நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லைஎனும் கந்தர்வர்னின் கவிதை வரிகள் உண்மையில் வைர வரிகளே! ஆண்களைத் திருப்திபடுத்துவதையே வாழ்வின் நோக்கமாகக் கொள்ளாமல் இருந்திருந்தால், பெண்கள் ஒருவேளை மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாகியிருக்கலாம். அனைத்துத் துறைகளிலும் பரிணமித்திருக்க முடியும்.

 

சிறுகதை இலக்கியத்தில் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களும் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஒரு நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையவர்கள் என்கிறார் இலக்கியத் திறனாய்வாளர் இரா.பிரேமா. இந்த வரலாற்றை நான்கு கட்டங்களாகப் பிரித்து வை.மு.கோதைநாயகியின் காலகட்டம், லட்சுமியின் காலகட்டம், ராஜம் கிருஷ்ணனின் காலகட்டம், இறுதியாக அம்பையின் காலகட்டம் என வரையறுக்கிறார் இரா.பிரேமா. அம்பையின் காலகட்டத்தில் சிவகாமி, தமயந்தி, பாமா, அனுராதா, அனாமிகா, அமரந்தா போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுச்சியுடன் எழுதி வருகின்றனர். அம்பையின் காலகட்டத்தில் எழுதி வரும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வீரியமிக்கதாக உள்ளன என்பதும் இரா.பிரேமாவின் மதிப்பீடு. இதோ! அம்பையின் இத்தகு வீரியமிக்க சிறுகதைவீட்டின் மூலையில் ஒரு சமையலறை”!

இச்சிறுகதையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஒரு பப்பாஜியின் குடும்பத்தைச் சந்திக்கிறோம். பப்பாஜி தன் மனைவி ஜீஜி, விதவையான அவரின் பெரியம்மா படி ஜீஜி, மருமகள்கள் என்ற பெண்கள் படைசூழ வாழ்கிறார். ஆனால் கடைசி மருமகள் மீனாட்சி மட்டும் சற்றே வித்தியாசமாக வருகிறாள். வீட்டில் இருக்கும் ஆண்களைத் திருப்திப்படுத்துவதே இவர்கள் வாழ்வின் லட்சியமாகும். வீட்டின் மூலையில் இருக்கும் சமையலறையில்தான் இவர்கள் பொழுதையெல்லாம் கழிக்கிறார்கள். ஆனால் அந்த சமையலறை காற்றும், வெளிச்சமும் அற்ற மிகச் சிறிய அறை. பெண்கள் நாலாபுறமும் கம்பிகள் எழுப்பிய உலகில் புகுந்து கொண்டு, அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்! என்று அம்பை அதனைப் பகடி செய்கிறார்.

 

ஒரு தாய் தன் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுப்பதெல்லாம்சமையலறையை ஆக்கிரமித்துக்கொள்; அலங்காரம் செய்து கொள்ள மறக்காதேஇரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம் என்பதுஎன்கிறார். ”முப்பது பேர் வீட்டில் அஞ்சு கிலோ ஆட்டா மாவு பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்ததுஎன்று தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறார் ஜீஜி. நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்து விடவேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தில் கவலை அரிசி; மாங்காய் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தில் ஷர்பத், ஜூஸ், ஜாம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை, தள்ளிப் போகாவிட்டாலும் கவலை என்று இவைகளே பெண்களின் மண்டையில் அடைத்திருக்கின்றன. இவைகள் மட்டுமே வாழ்க்கை, அதிகாரம் என்று நினைத்திருந்த ஜீஜிக்கு அவள்  மருமகள் மீனாட்சி வேறு உலகத்தையும், வேறு அதிகாரத்தையும் சுட்டிக்காட்டுகிறாள்.

ஜீஜி! இந்தச் சமையலறை, அட்டிகை, வளையல், தங்கக்குண்டுச் சட்டிஇதிலெல்லாம் ஒரு பலமுமில்லை. அதிகாரம் அதிலிருந்து வரவில்லை. அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம். இதிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்”. என்று வேண்டுகிறாள். இதிலிருந்தெல்லாம் விடுபட்டிருந்தால், பெண்களும் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம்; கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்; போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம் என்ற அரிய

 

உண்மையை அந்த வீட்டின் கடைசி மருமகள் மீனாட்சி எடுத்துரைக்கிறாள் என்று கதை முடிகிறது.

             -----------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...